அமெரிக்காவில் (United States) 4600 தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் (M K Stalin) அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னணி தொழில் நிறுவனம்
இதன்போது சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவற்றில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா. பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைக்க அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது