Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இருந்து 270 கடல் மைல் தொலைவில் கடற்றொழில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த படகு, நேற்று (03.09.2024) காலை ஏழு பேரை ஏற்றிச் சென்ற போது கப்பலுடன் மோதியதால் இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்றுமொரு கடற்றொழில் படகு மூலம் நான்கு கடற்றொழிளாளர்கள் மீட்கப்பட்டதாகவும், மூன்று பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்
காணாமல் போனவர்கள் 28, 43 மற்றும் 52 வயதுடைய காலி – அஹுங்கல்ல மற்றும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, மீட்கப்பட்ட மற்றைய 4 கடற்றொழிலாளர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.