முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள்: அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்

இ – கடவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்தும் வரை அரசாங்கம் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இதுவரை நாளொன்றுக்கு 2000 கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க வேண்டி இருந்த போதும், 900 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுவதால் நீண்ட வரிசை ஏற்பட்டு பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்திருக்கின்றது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண விலை 

தொடர்ந்தும் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “குடிவரவு குடியகல்வுத்திணைக்களத்திடம் காணப்படுகின்ற கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 30 000 வரை குறைந்திருக்கின்றது.

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள்: அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம் | Sri Lanka Govt Should Issue Passports 2000 Per Day

இ-கடவுச்சீட்டு விநியோகத்தில் கொள்வனவு நடைமுறை எதனையும் பின்பற்றவில்லை. தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு அவற்றை வழங்கி இருப்பதனால், இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளது.

இதற்காக சாதாரண விலை மனுக் குரல் இடம் பெற்றிருக்க வேண்டும். அதையும் முறையாகச் செய்யவில்லை

சாதாரண கடவுச்சீட்டுகளை அச்சிடும் நிறுவனங்களுக்கு அதனை அச்சிடுவதற்கான போதுமான தொகைகள்(oders) வழங்கப்படவில்லை.

அமைச்சரவையே பொறுப்பு

கடவுச்சீட்டுக்களுக்கான கேள்விகள் என்ன என்பது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு தெரியாதா என்கின்ற ஒரு சிக்கலும் ஏற்படுகின்றது.

அது குறித்து பிரச்சினைகள் இல்லை என்பதால் மாதத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள்: அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம் | Sri Lanka Govt Should Issue Passports 2000 Per Day

எனவே இந்த சிக்கலுக்கு விரைவான தீர்வு பெற வேண்டும்

அத்தோடு ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவை இந்த இ-கடவுச்சீட்டு வேலைத்திட்டத்தில் எந்த ஒரு கொள்முதல் நடைமுறையும் இல்லாமல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருக்கின்றது.அதனால் இந்த பிரச்சினை தற்பொழுது உக்கிரமடைந்திருக்கிறது.

இவ்வாறான அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மாற்று திட்டம் இருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. இந்த வரிசை ஏற்பட்டமைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையே பொறுப்புக் கூற
வேண்டும்” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.