தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) ஏதேனும் ஒப்பந்தம் (டீல்) செய்திருந்தால் இந்த 13 ப்ளஸ் தொடர்பில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தெளிவாக விளக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 ப்ளஸ் என்ற விடயம் உள்ளடக்கப்படாத நிலையில், அவர்கள் இந்த 13 ப்ளஸை சமஷ்டியாகவா அல்லது ஈழமாகவா கொடுக்கப் போகிறார்கள் என்பதை தெளிவு படுத்து வேண்டும் என அங்கஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு தெளிவு படுத்தப்படாவிட்டால், இது தமிழ் மக்களின் வாக்குகளை மறுபடியும் போலியான வாக்குறுதிகளை கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதற்கான ஒரு முறைமையாகவே கருதப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபம் வெளிவருவதற்கு முன்னதாகவே தமிழரசுக் கட்சி தனது ஆதரவை வெளிபடுத்தியதின் பின்னணி சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் விளக்கமளிக்கையில்,
https://www.youtube.com/embed/aMzuDHbgF5c