சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் தற்போது தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தின் பின்னணியில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை காட்டிக்கொடுப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) (குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், தமது அரசியலை அழித்து விடுவோம் என்றும், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய விடமாட்டோம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் போலி விமர்சனங்களுக்கு பயந்து, தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கூறாமல் ஓடி ஒழியப்போவதில்லை என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிரதான பிரச்சினை
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் ஒரு பிரதான வேட்பாளருடன் இணைந்து அடுத்த ஐந்து வருடங்களும் நேரடியாக களத்தில் இருந்து மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பும் தமக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையாக அரசியல் அதிகார பகிர்வு பிரச்சினை காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/vEh9rJnqhhY