நான்கு பிரபல பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அ. எச். எம். டி. நவாஸ், ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திஷ்ய வேரகொட விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அதனை தொடர்ந்து, குறித்த மனுவை பரிசீலிக்க ஜனவரி 23ஆம் திகதியை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பாடசாலைகளுக்கான புதிய அதிபர் நியமனம் முறைசாரா முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்தந்த நியமனங்களை செல்லுபடியற்றவை என உத்தரவிடுமாறு மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.