இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைகயை பெறல் உள்ளிட்ட காரணங்களின் பெயரில் அழைத்து செல்லப்பட்டு பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள்
மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட்டோரை மீட்பதற்காக இலங்கையில் உள்ள ஐ.எம்.ஓ குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்து அவர்களை மீட்டுள்ளதுடன் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.