மியன்மாரில் (Myanmar) உள்ள இணைய மோசடி அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் (Sri Lanaka) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 20 இலங்கையைர்களையும் சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்ட நிலையிலேயே இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.
இலங்கைத் தூதரகம்
குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைப் பாத்திரங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.