முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

மட்டக்களப்பு (Batticaloa), சத்துருக்கொண்டான் பகுதியில் நினைவஞ்சலியொன்று இடம்பெற்ற வேளையில் அங்குள்ள நினைவுத்தூபியை காவல்துறையினர் உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சாத்திருகொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று (09.09.2024)
அனுஷ்டிக்கப்பட்டன.

நினைவுத் தூபிக்கருகில் பதற்றம்

அதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சந்திருக்கொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் படுகொலை
செய்யப்பட்டனர், போன்ற விபரங்களை நினைவுக் கல்லில் பொறித்து தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்றன.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

இந்தநிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தூபியை அவதானித்த பின்னர், நீங்கள் இலங்கை
இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று
எழுதியுள்ளீர்கள்.

இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த
கொலையும் இடம்பெறவில்லை எனவும், ஏற்பாட்டு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதத்தில் காவல்துறையினர்

மேலும், இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்போவதாக தெரிவித்த காவல்துறையினர், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

தற்போது அங்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும், வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
அவ்விடத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கல் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இராணுவ ஒட்டுக்
குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொது மக்களை நினைவு கூருகின்றோம் எனும் வாசகம் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில்
பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை காவல்துறையினர் நினைவுத்தூபியிலிருந்து உடைத்து
எடுத்துச் சென்றுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/rbvIfr96fKA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.