ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அமைச்சர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையினால் அமைச்சர்களுக்காக சில அமைச்சுக்களின் அதிகாரிகள் இரகசியமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில அமைச்சுக்களின் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுக்குத் தெரிவிக்காமல், கட்டடங்களை வாடகைக்கு விடுதல், பொருட்களை வாங்குதல் போன்றவற்றுக்கு பெருமளவு பணம் செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அமைச்சுக்களில் உள்ள வாகனங்களும் சிரேஷ்ட அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தனிப்பட்ட அரசியல் விடயங்கள்
அத்துடன், அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகள் தமது தனிப்பட்ட அரசியல் விடயங்கள் காரணமாக அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சுக்களின் அதிகாரிகள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.