முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் (The People for Equality and Relief in Lanka  (பேர்ல்) அமைப்பு, புதிய ஒரு சட்ட விளக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், 2009 இல் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு நிரூபித்துள்ளது.

இனப்படுகொலை

ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2009 ஜனவரி முதல் மே 18 வரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு | Pearl Organization Claims Genocide Sl Proven

இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அட்டூழியங்களை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ மொழியில் மூடிமறைத்தது மற்றும் காசா உட்பட இதேபோன்ற இனப்படுகொலைச் செயல்களுக்கு வழி வகுத்தது” என்று பேர்லின் நிறைவேற்று இயக்குநர் மதுரா ராசரத்தினம் கூறியுள்ளார்.

எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் கூறிவரும், 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை முறையாக அங்கீகரிக்குமாறு பேர்ல் அமைப்பு, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை தமது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இனப்படுகொலைகளின் மிகவும் பொறுப்பான குற்றவாளிகளில் ஒருவரான, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, “விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் மட்டுமே” இறுதி யுத்தத்தின்போது “எதிர்ப்பு மண்டலத்தில்” இருப்பதாகக் கூறியிருந்தமையானது, இனப்படுகொலைக்கான சாத்தியத்தை நிரூபிப்பதாகவும் பேர்லின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.