நாட்டிற்கு மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் (puttalam) நேற்று (13) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம். அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி
ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையினையே ஐஎம்எப் (IMF) முதலில் விதித்தது. அதன்படி செயற்பட்டதாலேயே இன்று ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது.
அதனால் எரிவாயு, எண்ணெய், உணவு போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளன.
சமுர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் வழங்க முடிகிறது. நாம் படிப்படியான சலுகைகளை வழங்கி வாழ்க்கை சுமையை குறைப்போம்.
வாகன இறக்குமதி
இன்று நாட்டிற்கு மீண்டும் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம்.
வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம்.
அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும்.
எனவே திசைக்காட்டியிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாாரக இருக்கிறாார்களா என்பதே எனது கேள்வி.
திசைக்காட்டியிடம் எனது கேள்விக்கு பதில் இல்லை.
என்னோடு விவாதம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு நான் தயார்.
அவர்களின் பொருளாதார முறைமை எதுவென சரியாக விளக்கம் சொன்ன பின்பே விவாதம் செய்ய முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவித்துள்ளார்.