இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேசத்தின் அவதானம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது ஆதவினை வெளியிட்டு வருவதுடன், இந்தியா நேரடியாக களமிறங்கியுள்ளது.
தென்னிலங்கை அரசியல் இவ்வாறு சூடுபிடித்துள்ள நிலையில் மறுபக்கம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் களம் இறங்கியுள்ள நிலையில், அரியநேத்திரன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தமிழ் மக்களுக்கு முக்கிய கட்டமாக 2024 ஜனாதிபதி தேர்தல் காணப்படுவதாக அரசியல் தலைவர்கள் நாளாந்தம் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட அமைதியின்மையை சீர்குலைத்துள்ளது.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியின், தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பிலும், ஜனாதிபதி தேர்தலில் சர்வதேசத்தின் பிரசன்னம் குறித்தும் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.