தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது
செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே நேற்று (14) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த தாக்குதலின்போது கொலை செய்யப்பட்ட மனைவியின் சகோதரியும்
காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.