Courtesy: Sivaa Mayuri
இலங்கை தனது பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நாடு, இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இதுவரையில் அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
திட்ட விவாதங்கள்
செப்டெம்பர் 12 அன்று, செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் இயக்குனர் ஜூலி கோசாக், தொடர்ந்து சீர்திருத்தங்கள் மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் அதே வேளையில், மூன்றாவது மீளாய்வுக்கான நேரம் எதிர்வரும் தேர்தல்களின் முடிவைப் பொறுத்தே அமையும் என கோசாக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலுக்குப் பின், புதிய அரசாங்கம் அமைந்தவுடன் திட்ட விவாதங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.