அமெரிக்க (US) ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) வெளியிட்டுள்ள பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
புளோரிடாவில் (Florida) வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள தனக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் விளையாடிக்கொண்டிருந்த போது, வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து, ட்ரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எக்ஸ் பதிவு
இதன் படி, சந்தேகநபர்கள், ட்ரம்பை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், “ டொனால்ட் ட்ரம்பை ஏன் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்” என எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பகிர்ந்த எலான் மஸ்க், “பைடன் மற்றும் கமலாவை யாரும் கொல்வதற்கான முயற்சிகூட செய்யவில்லை” விமர்சித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மஸ்க்கின் ஆதரவு
தற்போது அந்த பதிவானது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பலர் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்பிற்கே, எலான் மஸ்க் தனது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏற்கனவே, ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையயும் குறிப்பிடத்தக்கது.