முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் வாகன உற்பத்தித் துறையின் புதிய புரட்சி: வேலை வாய்ப்புகளும் உருவாக்கம்

குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (17) திறந்து வைத்தார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலையான வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையை ஆரம்பிக்க, 27 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட 15 ஆசனங்களைக் கொண்ட முதல் வாகனம் இம்மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

உலகளாவிய வாகனத்துறைசார் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்தரத்திலான சர்வதேச இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

நாட்டில் வாகன உற்பத்தித் துறையின் புதிய புரட்சி: வேலை வாய்ப்புகளும் உருவாக்கம் | South Asias Largest Automotive Assembly Plant Sl

மேலும், உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு இணங்க, சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சி நிறுவனமும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பயிற்சியின் மூலம் இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஏற்றுமதித் துறை

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ”இந்தத் தொழிற்சாலையை நிறுவ 2015 இல் அனுமதி வழங்கியிருந்தோம். ஆனால் அன்றிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் வாகன உற்பத்தித் துறையின் புதிய புரட்சி: வேலை வாய்ப்புகளும் உருவாக்கம் | South Asias Largest Automotive Assembly Plant Sl

நாடாளுமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 2019 இல் தொடங்கப்படவிருந்த இந்தத் திட்டம், கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தடைப்பட்டது.

நான் ஜனாதிபதியான பின்னர், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பித்து வைத்தேன். அதன்படி இன்று வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் நிறுவனத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 50,000 வாகனங்களை சந்தைக்கு விநியோகிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் நமது ஏற்றுமதித் துறையை வலுப்படுத்த முடியும்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.