தமிழரசுக் கட்சி சஜித்திற்கு (Sajith Premadasa) வாக்களிப்பதாக தெரிவித்திருந்தாலும் இது தனிநபராக சுமந்திரனின் (M. A. Sumanthiran) அறிவிப்பு மாத்திரமே என சுவிற்சர்லாந்து (Switzerland) உலகத்தமிழ்மறை (திருக்குறள்) அமைப்பு தலைவரான பூநகரி பொன்னம்பலம் முருகவேள் (Poonagari Ponnambalam Murugavel) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தின் முன் கொண்டு நிறுத்தியவரே இன்று தமிழரசு கட்சி தொடர்பில் மக்களிடையே ஒரு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
தனிப்பட்ட அரசியல்
தன்னுடைய தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்திற்காக சுமந்திரன் திட்டமிட்டு அனைத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுக்காக களமிறங்கியுள்ள சங்கு சின்னத்திற்காக வாக்களிப்பதா அல்லது இல்லை எம்மை ஏமாற்றிவரும் தென் பகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா என மக்கள் நுனுக்கமாக ஆராய வேண்டும்.
இலங்கை அரசியல்
இந்தநிலையில், தமிழரசுக் கட்சி இவ்வாறு தனிபட்ட நபர் கீழ் செயற்படுவதற்கு கட்சியின் பழைய தலைவர்களும் இசைவாக்கமடைந்து ஒன்றும் செய்யமுடியாமல் இருப்பதுதான் காரணமென தமிழ் மக்கள் சிந்திக்கின்றார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கில் ஐந்து இலட்சம் வீத வாக்குகளை சங்கு சின்னம் பெறுமாக இருந்தாலும் அது இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்தும் அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடவும்.
https://www.youtube.com/embed/WyeD9x0htiY