முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் : தயாரான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை(ctb) தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

காவல்துறை பணிகளுக்காக பேருந்துகள்

மேலும் தேர்தல் தொடர்பான காவல்துறை பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

ஜனாதிபதி தேர்தல் : தயாரான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் | 1358 Buses Ready For Election Duty

இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நாளையும்(20) நாளைமறுதினமும் (21) விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று விசேட தொடருந்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கே கே எஸ் விசேட தொடருந்து சேவை

இன்றும் நாளை மறுதினம் 21ம் திகதியும் கொழும்பு(colombo) கோட்டையில் இருந்து காங்கேசன்துறை(kankesanthurai) வரையிலும், நாளை மற்றும் 22ம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு வரையிலும் இந்த தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : தயாரான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் | 1358 Buses Ready For Election Duty

எனினும் அநுராதபுரத்திற்கும்(anuradhapura) மாஹோவிற்கும் இடையிலான தொடருந்து பாதை பழுதடைந்துள்ளமையினால் தொடருந்து சேவைகள் இடம்பெறாது என தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்