தற்போது ஆண் பெண் அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சினை மற்றும் முடி தொடர்பான அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனபதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகளை தான் பெற முடியும்.
எனவே இயற்கையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம்.
கறிவேப்பிலை இயற்கையாகவே முடிக்கு ஊட்டமளிக்ககூடியது, எனவே முடிக் கொட்டும் பிரச்சினைக்கு எனவே இது சரியான தீர்வாக அமையும்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் இருந்து முடிக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் கிடைக்கிறது.
கறிவேப்பிலை எண்ணெய் எந்த வகையான தொற்றுநோய்களிலிருந்தும் உச்சந்தலையைப் பாதுகாக்கவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது.
முடி உதிர்விற்கு தீர்வு
இதற்கமைய, கறிவேப்பிலை எண்ணெயை எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம்.
முதலில் கறிவேப்பிலை இலைகளை நன்றாக கழுவி உலர்த்தி வைக்கவும்.
பின்னர் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் உலர்த்திய கறிவேப்பிலையை சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் அதில் வெந்தயம் போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்களையும் சேர்க்கலாம்.
பின், வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி வர சிறந்த பலனை பெறலாம்.