ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று (22ஆம் திகதி) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்
ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குகளை மீள எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார்
ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகரிக்கும் முறைப்பாடு
இவற்றில் 34 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்களுடன் தொடர்புபட்டவை எனவும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,050ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிவரும் தேர்தல் முடிவுகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸநாயக்க முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.