இலங்கையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த வாக்களர்களில் 3,820,738 பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில், 79.46% மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், மொத்தம் 13,619,916 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் 97.8% செல்லுபடியாகும் வாக்குகள், 13,319,616 என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
எவ்வாறாயினும், 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இது மொத்த வாக்குகளில் 2.2% ஆகும்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க முன்னிலை வகித்து வந்ததுடன், அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பின் தொடர்ந்து வந்தார்.