2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அவர், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திறைசேரிக்கு பணிப்பு
இதற்கமைய, ஒரு ஏக்கருக்கு15,000 ரூபாவில் இருந்து ரூபா 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
I advised the Treasury to increase the fertilizer subsidy for paddy farmers in the 2024/25 Maha season from Rs. 15,000 per hectare to Rs. 25,000 from October 01st.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 26, 2024
அதேவேளை, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கடற்றொழிலுக்கான எரிபொருள் மானியம் வழங்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு திறைசேரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.