முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகள்

இரண்டு வருடங்களில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாரிய புதைகுழிகளில்
ஒரு புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இறுதி
தடயவியல் தொல்பொருள் அறிக்கை நீதிமன்றில் கையளிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு
புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான அகழ்விற்கு பொறுப்பான
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை நேற்று (செப்டம்பர் 26) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200
மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை
தோண்டும் வேளையில் ஜூன் 29, 2023 அன்று மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின்
ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்ட, கொக்குத்தொடுவாய் மனித புதைகுயிலிருந்து 52 பேரின்
எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்
2024 ஜூலை 15ஆம் திகதி மூடப்பட்டது.

தோண்டப்பட்ட சடலங்கள் 

தொண்ணூறுகளில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்
முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகள் | Colombo Harbor Burial Ground Research Skull Found

என்பதை நீதிமன்றத்திற்கு வழங்கிய
நிபுணரின் இறுதி அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கொக்குத்தொடுவாய்
வெகுஜன மயானத்தில் இருந்து சடலங்களை தோண்டி எடுக்கும் செயற்பாடுகளை அவதானித்த
சடத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக பாரிய புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் முதல் நாள்
முடிவில் குறைந்தது ஒருவருக்குச் சொந்தமான மண்டை ஓடு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட, கொழும்பு துறைமுக புதைகுழியின் முதல்
கட்ட அகழ்வுப் பணிகள் எட்டு நாட்களுக்குப் பின்னர், செப்டம்பர் 13
வெள்ளிக்கிழமை பிற்பகல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, குறைந்தது இரண்டு
பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மேலும் நான்கு மண்டை
ஓடுகள் அகழ்வுக் குழியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இன்று (செப்டெம்பர் 26) மாலை
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், ஒரு மண்டை ஓடு மாத்திரமே மீட்கப்பட்டதை
அவதானித்துள்ளனர்.

நீதிமன்றில் ஒப்படைப்பு 

கொழும்பு வெகுஜன புதைகுழியில் முதற்கட்ட அகழ்வு பணியின் போது தோண்டப்பட்ட
எலும்பு துண்டுகள் தற்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில்
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகள் | Colombo Harbor Burial Ground Research Skull Found

இந்த பாரிய புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் விசாரணைகள் கொழும்பு சட்ட
வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியல் ராஜ்
சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக
வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில்
அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள்
கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்க
முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த
இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.