இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு வகை பணவீக்கம்
மேலும் ஓகஸ்ட் 2024 இல் 0.8% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.4% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) வருமான வரியை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.