பொலன்னறுவை(polonnaruwa) எலஹெர கமநல மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் அறுவடைக்குரிய விலை கிடைக்காமையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எலஹெர பண்ணை கொலனியில் பெரிய வெங்காய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் உரிய விலை கிடைக்காமையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
செலவு செய்த தொகை கூட கிடைப்பதில்லை
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், சாகுபடியின் போது கட்டுப்படியாகாத விலையில் எண்ணெய், உரம் விலை உயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு பருவத்தில் அறுவடை செய்யும் போது வெங்காய விலை குறைந்துள்ளதாகவும், நியாயமான விலை கிடைக்காமல் செலவு செய்த தொகை கூட கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
அறுவடைக்கு வழங்கப்படும் விலை குறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “அரசு எப்போதும் உள்ளூர் பெரிய வெங்காயத்தை அறுவடை செய்யும் போது மிகக் குறைந்த விலைக்கு வாங்குகிறது.
தமது பெரிய வெங்காயத்திற்கான நியாயமான விலையாக 250 ரூபாவை அரசாங்கத்திடம் வழங்குமாறு கோருகின்றனர்.
நியாயமான விலை
ஒரு வாரத்திற்கு முன்பு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 280 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், தற்போது 210 ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் இதனால் விளைச்சலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து வாங்கப்படும் ஒரு கிலோ வெங்காயம், தம்புள்ளை சந்தையில் கிலோ ஒன்றுக்கு 300 முதல் 320 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கடும் நெருக்கடி
அடுத்ததாக மொத்த வியாபாரிகளே விற்பனை செய்வார்கள் எனவும், ஒவ்வொரு பருவ காலத்திலும் எலஹெர விவசாய மாவட்ட பெரிய வெங்காய விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும், தமது பெரிய வெங்காயச் செய்கைக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றனர்.
images-ada