முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

4 வீதத்தால் குறைக்கப்படவுள்ள பேருந்துக் கட்டணம் : வெளியான அறிவிப்பு

புதிய இணைப்பு

எரிபொருள் விலையை குறைத்ததால் பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது

முதலாம் இணைப்பு

நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது.

இதன்படி புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தகவல் வெளியகி உள்ளது.

குறித்த தீர்மானமானது, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை திருத்தம்

இந்நிலையில், இன்று (1.10.2024) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4 வீதத்தால் குறைக்கப்படவுள்ள பேருந்துக் கட்டணம் : வெளியான அறிவிப்பு | Bus Fare Revision New Announcements

இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

4 வீதத்தால் குறைக்கப்படவுள்ள பேருந்துக் கட்டணம் : வெளியான அறிவிப்பு | Bus Fare Revision New Announcements

மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல்

352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

4 வீதத்தால் குறைக்கப்படவுள்ள பேருந்துக் கட்டணம் : வெளியான அறிவிப்பு | Bus Fare Revision New Announcements

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்