Courtesy: Sivaa Mayuri
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் செய்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீள் நடத்தல்
அனைத்து மாணவர்களுக்கும் நியாயத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையின் தேசிய பரீட்சை முறைமையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.