யாழில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நினைவரங்கம், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்.கலைத்தூது கலையகம்,திருமறைக் கலாமன்றம் தண்ணீர்த்தாங்கி அருகில் இடம்பெறவுள்ளது.
இதனடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை (04) மாலை நான்கு மணிக்கு நினைவரங்கம் முனனெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்
இந்நிகழ்விற்கு, யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமைத்தாங்கவுள்ளார்.
பலதரப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த நிகழ்வில் அணனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.