நாளைய தினம் நாடு முழுவதிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
நாளைய தினம் சட்டத்தை மீறி செயற்படுவோர் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மீறல் ஈடுபடுவோர் தொடர்பில் 1913 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யப்பட முடியும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.