இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாளைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவிருக்கின்றார்.
இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வருகைத் தரவுள்ள குழுவினர்
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அவரது குழுவினர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

