ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார்.
உயர்மட்ட இராஜதந்திரி
இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜெய்சங்கர் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வந்த உயர்மட்ட இராஜதந்திரி ஆவார்.
இரு நாட்டு உறவு
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார்.
Pleased to recieve Indian External Affairs Minister @DrSJaishankar today, during his official visit to Sri Lanka. Discussions focused on boosting cooperation in multiple sectors. Dr. Jaishankar reaffirmed India’s support for Sri Lanka’s economic recovery. The importance of… pic.twitter.com/k1fcrzj4jh
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) October 4, 2024
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த பின்னர், இரு நாட்டு மக்களின் நலனுக்காக தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர்.