முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake)  கலந்துரையாடிய போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs of India) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61.5 மில்லியன் அமெரிக்க டொலர் 

இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு | Modernization Of Kankesanthurai Port India Support

மேலும், இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம், சுற்றுலா, பால்வள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்