மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படுமென மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தும், அது முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என முச்சக்கரவண்டிச் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்திருந்தது.
விலை நிர்ணயம்
எனினும் சில முச்சக்கர வண்டி சாரதிகள் விலை நிர்ணயத்தை பின்பற்றினாலும், பல சாரதிகள் விலை நிர்ணயத்தை பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 100 ரூபா கட்டணத்தில் மாற்றமில்லை எனவும், இரண்டாவது கிலோமீட்டருக்கான 100 ரூபா கட்டணத்தை 90 ரூபாவாக 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டியின் உள்ளே விலையை காட்டுவதற்கு கட்டண மீட்டரை முச்சக்கர வண்டியின் முன் இடது மூலையில் உரிய விலையை காட்சிப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விலைக் கட்டுப்பாடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.