உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
விசேட இறக்குமதி வரி
அத்துடன், 1 கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த இறக்குமதி வரி அதிகரிப்பால், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் கனிசமான அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.