பாலஸ்தீன – காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு
நிறைவடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது, இன்று (07) காலை தமிழ் இஸ்லாமிய பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னாள் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி பார் வீதி, திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு
மகாத்மா காந்தி பூங்காவை அடைந்துள்ளது.
அதேவேளை, இந்த பேரணியில் சமுக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்நடவடிக்கையை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.