முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள்

Courtesy: Sivaa Mayuri

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு மேலதிக அனுசரணை வழங்க பல நாடுகள் இணைந்துள்ளன.

ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய முக்கிய அனுசரணை நாடுகளால் முன்னதாக இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

 அனுசரணை நாடுகள் 

இருப்பினும், ஒக்டோபர் 4ஆம் திகதி நிலவரப்படி, அல்பேனியா, ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கொஸ்டாரிகா, குரோசியா, சைப்ரஸ், செக், டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லட்வியா, லீச்சென்ஸ்டென்ஸ்டீ , லிதுவேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகியன இந்த தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளாக இணைந்துள்ளன.

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள் | Un Decision On Sri Lanka Other Countries Joined

மேலும், மலாவி, மோல்டா, மொண்டினீக்ரோ, நெதர்லாந்து நியூசிலாந்து, வடக்கு மெசிடோனியா, நோர்வே, போலந்து, போர்த்துக்கல்; ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பெரிய பிரித்தானியா¸ அமெரிக்கா மற்றும் வடக்கு அயர்லாந்து 

மேலும், இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இந்த தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

57ஆவது அமர்வு 

A/u;RC/57/L.1 என்ற இந்த தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்த தீர்மானம் 51 – 1இல் உள்ள ஆணையை புதுப்பிக்கும் வகையில் ஆனது.

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள் | Un Decision On Sri Lanka Other Countries Joined

மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய 57ஆவது அமர்வின் போது முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானம், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51 – 1இல் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை மற்றும் கோரப்பட்ட அனைத்து பணிகளையும் நீடிக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கை, பேரவையின் 60ஆவது அமர்வில் ஊடாடும் உரையாடலில் விவாதிக்கப்படும் என்று இந்த புதிய தீர்மானம் கூறுகிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு 2024 செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.