முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera) கொழும்பு 7, பேஜெட் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (8) வெளியேறினார்.
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் கல்லூரிக்கு மாற்றுவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்ற பிரேரணையை தற்போதுள்ள அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு மாற்றப்படும் உத்தியோகபூர்வ இல்லம்
இதன்படி, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவது தொடர்பான அனைத்து கடிதப் பரிமாற்றங்களும் நிறைவடைந்துள்ளதாகவும், அதன்படி இன்று (8) முதல் உத்தியோகபூர்வ இல்லம் சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு மாற்றப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் 108 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுமாறு அநுர குமார தலைமையிலான அரசாங்கம் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.