அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு (Nilantha Jayawardena) எதிராக தாக்க்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி குறித்த மனு மீதான விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக மற்றும் சமாதான நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (09) சோபித ராஜ கருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன மீது வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.