நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, தமிழ் பொதுக்கட்டமைப்பால் எட்டப்பட்ட உடன்படிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளராக இருந்தாலும் சரி மற்றும் சின்னமாக இருந்தாலும் சரி ஜனாதிபதி தேர்தலுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்து.
சட்டத்திற்கு முரணானது
அத்தோடு, இந்த பொது சேவை நடவடிக்கையில் பங்கு கொள்ளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்தநிலையில், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, முன்னதாக இருந்த குத்துவிளக்கு சின்னமின்றி சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
குறித்த தீர்மானமானது சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி கு. குருபரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,