ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக இலண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாத குழப்பங்கள் புலம்பெயர் தமிழர்களின் சமுக வலைத்தளங்களில் தொடர்கின்றன.
ரில்வினுக்கு லண்டனில் வெளிப்பட்ட இந்த எதிர்ப்பு இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலுக்கு விவேகமற்றது. டயஸ்போரா தமிழர்களின் ஒரு தரப்பு வன்மாக நடந்துகொள்வதாக,இந்த வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும் ஒரு தரப்பு விமர்சிக்கின்றது
இவ்வாறான விவாதங்களை முன்வைக்கும் தரப்பில் இன்னும் ஒரு பகுதி இதற்கும் ஒரு படிமேலே போய் இந்த எதிர்ப்புபோராட்டங்களில் பங்கெடுத்தவர்களில்; அநேகமானோர் பிரித்தானியாவில் தமது அகதி தஞ்சக் கோரிக்கைகளுக்குரிய ஆதாரங்களுக்காக பங்கெடுத்ததான அதீத திரிபுவாதத்தை பதிவிட்டதையும் காணமுடிகிறது
ஆனால் தமிழ்மக்களின் அரசியல் உரிமைபோராட்டமே ஒரு ஏகாதிபத்திய சதியென்பதால் அது என்ன விலைகொடுத்தேனும் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்பதை வரிந்து கட்டிய ஜேவிபியின் முக்கிய முகத்துக்கு போரின் விளைவால் தமது தேசத்தை துறந்த புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு ஜனநாயக ரீதியில் இவ்வாறான எதிர்ப்பைக்காட்டும் உரிமையும் இருக்கிறது என்பதும் இன்னொருவிடயம்.
இந்த நிலையில் இந்த விடயங்களுடன் வருகிறது செய்திவீச்சு…
https://www.youtube.com/embed/sJvingOJ2PA

