முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa
) , முன்னாள்
அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஆகியோர் போட்டியிடவோ தேசியப் பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள்
என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல்
அவரது பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி
தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் போட்டி

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர  ராஜபக்ச மொனராகலை
மாவட்டத்திலும்,
நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும்
தெரிவித்துள்ளது.

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம் | Rajapaksa Including Namal Out General Election

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் (Geethanath Cassilingham), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் உள்ளிட்டோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வன்னித்தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.