நாட்டில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
கடும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 280 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
விலைகளின் விபரம்
இதேவேளை, ஒரு கிலோ வெங்காயத்தாள் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 80 ரூபாவாகவும் ,ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ நோகோல் 100 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 800 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பாகற்காய் 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 150 ரூபாவாகவும் ,ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.