முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம்

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இரவுநேரம் செல்லும் திருடர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கி வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச் செல்வது தொடர்பாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நேற்றையதினம் (11) வெலிவேரி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை அவரது குழந்தை மற்றும் கணவர் முன்னிலையில் வன்கொடுமை செய்து பொருட்களை திருடிக் கொண்டு ஓடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

 கணவர் முன்னே மனைவி வன்புணர்வு

வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர்.

திருடர்கள் இருவரும் கூரிய ஆயுதங்களை காட்டி வீட்டில் இருந்த கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையின் கைகளை கட்டி வாயில் துணிகளை திணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அப்போது வீட்டில் இருந்த மனைவி இருவர் கண்முன்னே வன்கொடுமைக்கு ஆளானார்.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இரு திருடர்களும் வீட்டில் இருந்த பல மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னரும் திருட்டு சம்பவங்கள்

இந்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் வெலிவேரிய, தொம்பே மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இரண்டு திருடர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

காவல்துறைக்கு கடும் நெருக்கடி

குறித்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் குறித்த வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது காவல்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதற்குக் காரணம், இந்த இரு திருடர்களும் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு வந்ததால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இதன்படி திருடர்களை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு திருடர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.