பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார்.
புதிய குடியேற்றச் சட்டம்
அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பிலான சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கைகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.