முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) தெரிவித்துள்ளார்.

இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்கான இந்த மேலதிக கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும் என  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | 3000 Allowance To Pensioners Release Good News

இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அரச நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

ஓய்வூதியர்களின் கணக்கு 

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake), இதற்கான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

2024 ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் இடைக்கால கொடுப்பனவான ரூ.3000 கிடைக்காததால் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, அரசின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இம்மாதம் முதல் இந்த தொகையை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | 3000 Allowance To Pensioners Release Good News

இந்தநிலையில், ஒக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதால், ஒக்டோபர் மாதத்துக்கான ரூபா 3000 கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களது கணக்கில் வைப்பிலிடுமாறும் 3000 ரூபா கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

தற்போது, அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.