முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன்

அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை (srilanka) அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் பங்கேற்றிருந்த வவுனியாவை சேர்ந்த இளைஞனே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன் | Srilankan Tamil Boy About To Deport From Australia

இந்நிலையில், இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அகதி முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குடிவரவு சட்டத்திற்கு அமைய நாடு கடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை முன்னெடுத்து வருவதாக உள்துறை அமைச்சை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா – ரஷ்ய எல்லை

இதேவேளை, ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ். கோப்பாய் (kopay) பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ்.ஜதுசன் என்ற இளைஞன் இரண்டு நாட்களின் முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன் | Srilankan Tamil Boy About To Deport From Australia

எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா – ரஷ்ய எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இளைஞனின் மரணம் கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்