முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேரிடம் இன்று (17) பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் போனோர் விவரங்கள் தொடர்பிலான இதுவரையில் 21,630க்கு மேற்பட்ட
விண்ணப்ப படிவங்கள் கிடைத்துள்ளன. அந்த விண்ணப்பப் படிவங்களில் பொலிஸார்
மற்றும் இராணுவத்தினர், முப்படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இதில் 14 ஆயிரத்து 988 விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்காக
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 6688 விண்ணப்ப படிவங்கள் பூர்வாங்க விசாரணைகள்
நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 3800க்கும் மேற்பட்ட விண்ணப்ப
படிவதாரிகளுக்கு ரூபா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.

 பூர்வாங்க விசாரணை 

இந்தக் கொடுப்பனவு அவர்களுக்கான இழப்பீட்டுக்கான கொடுப்பனவு அல்ல எனவும்,
அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவே வழங்கப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு | Inquiry To Missing Persons Relatives

இதுவரையில் காணாமல் ஆகியுள்ளமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில்
இதுவரையில் செய்து முடிக்கப்பட்ட பூர்வாங்க விசாரணைபடி 3000க்கும்
அதிகமானவர்கள் காணாமல் ஆகியுள்ளமைக்கான சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக விசாரணைக்காக 830 விண்ணப்ப படிவங்கள் தொடர் விசாரணைகளுக்காக
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

விண்ணப்ப படிவங்கள் 

மேலும், அதில் 17 பேருடைய விண்ணப்பபடிவங்களில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது முழுமையாக கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு | Inquiry To Missing Persons Relatives

இதில் மூவர் உயிருடன் இல்லாத
காரணத்தினால் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிவதற்காககவும், ஏனைய 14
பேருடைய விண்ணப்ப படிவங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விசாரணை நடவடிக்கையில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் தியாகராஜா யோகராஜா மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.