வடக்கு காசாவில் (Gaza) உள்ள பெய்ட் லஹியாவில் (Beit Lahia) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாகவும், மீட்புக் குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்றும் மேலும் தெரியவந்துள்ளது.
அதிரவைக்கும் தாக்குதல்
லாஹியாவின் மேற்குப் பகுதி முழுவதையும் அதிரவைக்கும் அளவுக்கு இந்தத் தாக்குதல் மிகப் பெரியதாக இருந்ததாகவும் மக்கள் உள்ளே இருக்கும்போதே கட்டிடங்கள் இடிந்து விழுந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மக்களை வெளியேறுமாறு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் வெளியேறவதற்கு அவர்களுக்கு வாய்ப்பே இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறப்பு எண்ணிக்கை
இதன் படி, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், வரும் சில மணி நேரங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீரங்கிகள் மற்றும் பல கண்காணிப்பு ட்ரோன்கள் வட்டமிடுவதால், குறிப்பிட்ட தளத்தையாரும் நெருங்க முடியவில்லை என்றும் துணை மருத்துவர்களும் தற்காப்புக் குழுவினரும் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.