முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்காக கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது
கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர்
பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடியில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான்
போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன்.

தேர்தல் ஆணைக்குழு

அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் செலவு
செய்கின்ற செலவு அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் அறிக்கை செய்யப்பட
வேண்டும்.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம் | Ariyanethran Calculation For Presidential Election

என இருந்தது அதன் அடிப்படையிலேயே கடந்த 13 ஆம் திகதிக்கிடையில் அந்த
அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.

மூன்று பேர் அந்த செலவழிக்கையை வழங்கப்படவில்லை எனவும், அதில் எனது பெயரும்
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல்

உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு நான்
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சைக்கு குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக
நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரின் மூலம் எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட
செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே
கையளித்திருந்தார்.

கடந்த 13 ஆம் திகதி என்பது விடுமுறை திகமாகையால் எனது
செலவறிக்கையை இமெயில் மூலமாகவும் பெக்ஸ் மூலமாகவும் அனுப்பியிருந்தோம்.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத விமர்சனம் குறித்து அரியநேத்திரன் விளக்கம் | Ariyanethran Calculation For Presidential Election

ஆனால் தற்போது பல ஊடகங்களில் சமூக வலைத்தலங்களிலும் சுயேட்சை வேட்பாளராக
போட்டியிட்ட நான் அந்த கணக்கறிக்கையை அனுப்பவில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக
வந்து கொண்டிருக்கின்றன அந்த செய்திகளுக்கு நான் முற்றாக மறுப்பைத்
தெரிவிக்கின்றேன்.

உண்மையிலேயே அந்த கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன்
என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் தேதி
கையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம்
யாரும் எதுவித சந்தேகத்தையும் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் ஊடகங்கள்
வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.